தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க இது தான் காரணம்..!! தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஓபன் டாக்..!!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா சந்தித்து பேசினார். ஆளுநரின் சந்திப்புக்கு பின்னால் பிரேமலதா அளித்த பேட்டியில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கான உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.
நான் கவர்னரை சந்தித்து எங்களின் 4 பிரச்னைக்கு தமிழ்நாட்டிற்கு தீர்வு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். தக்க முறையில் நடவடிக்கை எடுப்போம் என கவர்னர் பதில் அளித்துள்ளார்.
படிப்படியாக டாஸ்மாக் விற்பனையை குறைத்து போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேட்டு கொண்டுள்ளார்..
Discussion about this post