பெட்ரோல் குண்டு வீச காரணம் இதுதான்..!! கருக்கா வினோத் சொன்ன உண்மை..?
நீதிமன்ற காவலில் இருக்கும் கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன என்று காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை என்ற செய்தி மன உளைச்சலை ஏற்படுத்தியதால் பெட்ரோல் குண்டு வீசினேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருக்கா வினோத் வாக்குமூலத்தில், சிறையில் இருந்த போது நீட் தற்கொலை தொடர்பான செய்திகளை படித்த போது மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பிஎப்ஐ அமைப்பினருக்கும், தனக்கும் எந்த தொடர்புமில்லை என்றும், 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறையில் இருந்து வெளியே வந்ததற்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை எனவும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..