உயிரை எடுக்கும் டெங்குவை கண்டு மக்கள் இனி பயப்பட வேண்டாம்..!! ஏனா நாளையில இருந்து..!!
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் நாளை முதல் தினமும் தொடர் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த இருப்பதாக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை விடுத்துள்ளார். அதில், ”தமிழ்நாட்டில் மழை காரணமாக சில மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பதிப்பால் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது..
இதை கருத்தில் கொண்ட அரசு நாளை முதல் 1000 இடங்களில் நாள்தோறும் இலவச காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது..
குறிப்பாக காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட கிராமங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் இடையே காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உட்பட்ட அறிகுறிகள் தெரியவந்தால் உடனடியாக சரியான சிகிச்சை எடுக்கவும் கேட்டு கொண்டுள்ளனர்..
மேலும் உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பை கண்காணிப்பதற்காக சில சிறப்பு அதிகாரிகளை சுகாதாரத்துறை நியமித்துள்ளது..
Discussion about this post