ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் இது தான்..! எஸ்பி புதிய மாநிலத் தலைவர் பேட்டி..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அக்கட்சியின் புதிய மாநில தலைவராக வழக்கறிஞர் “ஆனந்தன்” நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர்.,
“பகுஜன் சமாஜ் கட்சியில் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு. ஆம்ஸ்ட்ராங் இந்த இயக்கத்தை முன்னெடுத்த செல்ல தன்னுடைய இரத்தத்தை சிந்தி இருக்கிறார். எங்கள் இயக்கத்தின் மூலம் பலர் பலன் அடைந்துள்ளனர்.,
பகுஜன் சமாஜ் கட்சியானது அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து செல்லும் ஒரு கட்சி.., தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை தலித் கட்சி போன்ற பிம்பத்தில் பலரும் கொண்டு செல்கின்றனர். ஆனால் அது வெகுஜன மக்களை ஒன்றிணைத்துச் செல்லும் இயக்கம் என்பது விரைவில் புரியும், ஆம்ஸ்ட்ராங் விட்டுச் சென்ற இடத்திலிருந்து நான் பணியை தொடர போகிறேன்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பொறுத்த வரை காவல்துறையினரின் செயல்பாடுகள் மிக குறைவாகவே உள்ளது. காவல் துறையினரின் விசாரணையானது ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சி, புகழ்ச்சி பிடிக்காத சிலர் தான் இந்த கொலை செய்திருக்கின்றனர்.
ஆற்காடு சுரேஷ் பகுஜன் சமாஜ் கட்சியில் பணியாற்றியவர், அவருக்கும் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உளவுத் துறைக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை ரவுடி எனக் கூறி கொலைக்கு நியாயம் கற்பிக்க நினைக்கின்றனர். ஆனால் அவர் அப்படியானவர் இல்லை. 2027ஆம் ஆண்டு வரை காவல்துறையினர் துப்பாக்கி லைசன்ஸ் கொடுத்துள்ளனர். பார் கவுன்சில் தேர்தல் முன்விரோதம் கூட இந்த கொலைக்கு காரணமா என்ற சந்தேம் இருக்கிறது. எங்களது போராட்டம் சட்டப்பூர்வமாக இருக்கும். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை பெற்று தருவோம்” என்று ஆனந்தன் கூறினார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..