ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் இது தான்..! சத்தீப் ராய் ரத்தோர் பேட்டி..!
சென்னையை பெரம்பூர் செம்பியம் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங். நேற்று இரவு தனது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கொலை செய்யப்பட்ட 4 மணி நேரத்தில் குற்றவாளிகள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
மறுபக்கம் ஆம்ஸ்ட்ராங் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின் கொலைக்கான காரணம் குறித்து ஆற்காடு பாலு வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சென்னை பெரியமேட்டில் மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவர் கூறியதாவது, “படுகொலை நடந்த மூன்று மணி நேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனை அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக தெரிவித்துள்ளனர். அதை தவிர அரசியல் பழிவாங்கும் நோக்கில் கொலை நடந்தது போல தெரியவில்லை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களிடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து கோணங்களிலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
– லோகேஸ்வரி.வெ