இசையும் காதலும் மீண்டும் இணைந்தது..! சேர்த்து வைத்த தயாரிப்பாளர்..?
ஜீவி பிரகாஷ்:
இவர் தமிழ் சினிமாவின் இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமாவார்.
இவர் கடந்த 2015 இல் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழ்த் திரைப்படமான வெயிலில் ஜி. வி. பிரகாஷ் ஒரு திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதன்பின் இயக்குனர் எஸ். சங்கரின் தமிழ்த் திரைப்படமான ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் ஒலிப்பதிவில் இவர் முதன்முதலில் ஒரு பாடகரானார்.
2013 இல், பிரகாஷ் குமார் “ஜி. வி. பிரகாஷ் குமார் புரொடக்சன்ஸ்” என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது தயாரிப்பில் வெளிவந்த முதற் படம் மத யானைக் கூட்டம் இவ்வாறு பன்முக திறமைகளை கொண்டவர் தான் ஜீவி பிரகாஷ்.
திருமணம்:
ஜிவி பிரகாஷ் தனது பள்ளி தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் இண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.
சைந்தவி திரைப்பட பாடகி என்பது குறிப்பிடதக்கது. அதிலும் ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி பாடிய இரவாக நீ, என்னாச்சு ஏதாச்சு, யார் இந்த சாலையோரம் போன்ற பல பாடல்கள் மெக ஹிட் அடித்தது. இவர்களின் காம்போ என்று தனி ரசிகர் பட்டளாம் உண்டு.
விவாகரத்து:
காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் பலரையும் கவர்ந்த இந்த காதல் ஜோடி சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். அது கோலிவுட் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியது.
மேலும் இவர்களின் விவாகரத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லபட்டாலும் இருவரிடமிருந்து அது பற்றிய எந்த கருதும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது இருவரும் மீண்டும் இணைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மீண்டும் இணைந்த ஜோடி:
அதாவது,வெற்றிமாறன் இயகத்தில் விமல் நடிக்கும் சார் என்ற படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று மாலை வெளியாகியது. இந்த பாடலை, ஜி.வி.பிரகாஷ் , சைந்தவியும் தான் இணைந்து பாடியுள்ளனர்.
இதுதொடர்பான போஸ்டரில் இருவரின் பெயரை பார்த்த ரசிகர்கள் நிஜ வாழ்க்கையில் அவர்கள் பிரிந்திருந்தாலும், வெற்றிமாறனால் ஒன்றிணைந்து உள்ளனர்.
மேலும் இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்