“என் வாழ்க்க இது தான்னு
கதையாக சொல்ல… உன் பேரு இல்லமா
ஒரு பக்கம் இல்ல..” தேசிய விருதை வென்ற திருச்சிற்றாம்பலம்..!!
திருச்சிற்றாம்பலம்:
கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில்,நடிகர் தனுஷ், , ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் திருச்சிற்றாம்பலம்.
‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
தேசிய விருது:
2022 ஆம் ஆண்டிற்கான 70 வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைப்பெற்றது. இந்த விருதுகள் பட்டியலில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் மற்றும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெற்றுள்ளது. மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு விருதுகள்:
கடந்த 2022ம் ஆண்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் சிறந்த நடிகை மற்றும் சிறந்த நடன இயக்குனர் என இரண்டு விருதுகளை வென்றுள்ளது.
தனுஷ் வாழ்த்து:
நடிகர் தனுஷ், நடிகை நித்யா மேனன்க்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். நித்யா மேனன் தேசிய விருதை பெற்றது தனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று தனுஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதேபோல சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றுள்ள ஜானி மற்றும் சதீஷ் மாஸ்டர்களுக்கும் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நித்யா மேனன் நெகிழ்ச்சி:
இந்தநிலையில் நடிகை நித்யா மேனன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எந்த சாதனையும் ஒரு தனிப்பட்ட நபருக்கானது அல்ல. இந்த தேசிய விருது ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்கு தங்களின் உழைப்பை கொடுத்தவர்கள், சோபனா காதபாத்திரத்திற்கான அன்பை பொழிந்தவர்கள் என அனைவருக்குமானது. சோபனா என்ற ஒளியின் முகமாக இருப்பதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்’, என்று தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”