“நான் இறந்துட்டேன்-னு சொன்னாங்க..,” – வருத்தமாக பேசிய பிரபல நடிகை!
ஆண் பாவம் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சீதா. இந்த படத்திற்கு பிறகு, குரு சிஷ்யன், புதிய பாதை உள்ளிட்ட வெற்றிப் படங்களில், முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
புதிய பாதை படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காதலால், நடிகர் பார்த்திபனை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், 20 வருடங்கள் அவருடன் வாழ்ந்த பிறகு, விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
பின்னர், சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார். அந்த திருமணமும், இறுதியில் விவாகரத்தில் தான் முடிந்தது. தற்போது சிங்கிளாக இருந்து வரும் சீதா, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், தன்னை பற்றி பரவி வரும் வதந்திகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது, தான் இறந்துவிட்டதாகவும், சினிமாவில் வாய்ப்பு இல்லை என்பதால், வீட்டை கூட்டி பெருக்கும் வேலை செய்து வருவதாகவும் சிலர் வதந்தி பரப்புகிறார்கள்.
இந்த வதந்திகளை உண்மை என்று நம்பிய சிலரும், என்னிடம் நீண்ட நாட்களாக பேசாமலே இருந்த சிலரும் கூட, நலம் விசாரித்தார்கள். இது சில நேரங்களில் பிரச்சனையாக தெரியவில்லை என்றாலும், ஒருசில நேரங்களில் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் பேசியுள்ளார்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”