ராயன் படம் செய்த புதிய சாதனை.. சிறந்த திரைக்கதைக்காக தேர்வு..!
கஸ்தூரி ராஜா, செல்வராகவன் போன்ற தரமான இயக்குநர்கள் உள்ள குடும்பத்தில் இருந்து வந்த நடிகர் தனுஷ், பா.பாண்டி படத்தின் மூலம், முதன்முறையாக இயக்குநர் ஆனார்.
அந்த படத்திற்கு பிறகு, தனது 50-வது படமான ராயனை, இயக்கியுள்ளார். கடந்த 26-ஆம் தேதி ரிலீசான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. இருப்பினும், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள இப்படம், தற்போது புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.
அதாவது, ஆஸ்கர் விருதை வழங்கும் பிரபல நிறுவனம் ஒன்று, சிறந்த திரைக்கதைகளை தங்களது நூலகத்தில் சேமித்து வைப்பது வழக்கம். ஏற்கனவே, தமிழ் சினிமாவின் பார்க்கிங் போன்ற படங்களின் திரைக்கதைகள் இந்த நூலகத்தில் இடம்பெற்று இருக்கின்றன.
இந்த வேளையில், தனுஷின் ராயன் படத்தின் திரைக்கதையும், அந்த நூலகத்தில் வைப்பதற்கு தேர்வாகியுள்ளது. இதுதொடர்பான தகவலை, சன் பிக்சர்ஸ் நிறுவனமும், தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
-பவானி கார்த்திக்