”மகாவிஷ்ணு பேசியதற்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை”- பள்ளி மேலான்மை குழு..!
சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பள்ளியின் சார்பில், மாணவர்களுக்கு மோடிவேஷன் அளிக்கும் வகையிலான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு பரம்பொருள் என்ற அறக்கட்டளையை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளி மாணவர்களின் மனம் வருந்தும் வண்ணம் பேசியிருந்தார். மேலும், முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாக தான், இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாக பிறந்துள்ளீர்கள் என்றும் அவர் பேசியிருந்தார். இவரது இந்த பேச்சு, பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. இவரது பேச்சுக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை எழுப்பி வந்தனர்.
பின்னர் இவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகி இருந்து மாகவிஷ்னுவை , சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்தனர். இந்தநிலையில் பள்ளியின் மேலான்மை குழு இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அதாவது மாணவர்களுக்கு மத்தியில் மகாவிஷ்ணு பேசியதற்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் தேர்வெழுதும் மாணவர்களுக்காக மோட்டிவேஷன் எனக்கூறி மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.