இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சித்திர வீரரான ரிசப் பண்ட் நேற்று மோசமான விபத்திற்கு உள்ளானார். அப்போது சம்பவ இடத்திலிருந்த சில இளைஞர்கள் அவருக்கு உதவி செய்யாமல் ரிசப் பண்ட்டிடம் இருந்த பண பையை திருடி சென்றுள்ளனர் இந்த செய்தி தற்போது அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விக்கேட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் ஐபிஎல்-லில் டெல்லி அணியின் கேப்டனுமான ரிசப் பண்ட் நேற்று முன்தினம் தனியாக அவரது காரில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். கார் முகமத்பூர் ஜாட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ரிஷப் பண்டின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்புகளில் மோதி தீப்பிடித்து எரிந்தது அப்போது அவரை அந்த காரின் கண்ணாடியை உடைத்து வெளியே வந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்பவரின் நெஞ்சை உலுக்கி வருகிறது. மேலும், ரிசப் பண்ட் இந்த புத்தாண்டை தன குடும்பத்தினருடன் கொண்டாட திட்டமிட்டு அவரது காரை தனியாக ஒட்டி வந்துள்ளார். மேலும் இவருக்கு வலது கால் ஜவ்வு, முதுகு பகுதிகளில் காயங்கள். காய் மற்றும் விரல்களால் எலும்புகள் சேதமடைந்துள்ளது என்று பிசிசிஐ அதிகார்வ பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் அந்த இடத்தில் இருந்த சில இளைஞர்களிடம் ரிசப் உதவி கேட்டபொழுது அந்த இளைஞர்கள் அவரிடம் இருந்த பண பையை திருடி சென்றுள்ளனர். காரில் இருந்து தானே வெளியே வந்தபிறது அவசர ஊர்தியை தொடர்பு கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ரிசப் பணியின் உறவினர்கள் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர். மேலும், இவருக்கு ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.