இவங்களுக்கு இவ்வளவு வயசா..? 90’ஸ் களின் கனவு கன்னி..
வாலி படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமாகி சோனா என்ற கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.., என்ன தான் இவங்களுக்கு வாலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும்.. ஹிந்தி படித்தில் ஹீரோயினாக அறிமுகமாகினார்..
பின் சில பூவெல்லாம் கேட்டு பார்த்து.., அது சொன்ன முகவரி-யில் சிநேகிதியுடன் ஒரு ரிதம் செய்தார்.., பின் அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவனாதால் “குஷி-யில்” கொடி கட்டி பறந்தார்..
அதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இருந்தும் இவரின் சந்திரமுகி படத்தில் நடித்திருந்த கதாபாத்திரம் இன்று வரை மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தது..
2003-ல் காக்க காக்க படத்தில் சூர்யாவுடன் நடித்து காதல் கொண்டார்.., பின் ஜில்லுனு ஒரு காதலுடன் 2007ம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்து கொண்டார்..
திருமணத்திற்கு பின் பல பட வாய்ப்புகள் கிடைத்தும்.., அதை சில காலம் தள்ளி வைத்தார் “ஜோதிகா” பின் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுத்தார்..
மகளிர் மட்டும், காற்றின் மொழி, ஜாக்பாட், ராட்சசி போன்ற படங்கள் பாராட்ட வைத்தது அதற்காக பல விருதுகளும் பெற்றார்..
அன்று முதல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள ஜோதிகாவின் 45 வது பிறந்தநாள் இன்று.., மதிமுகம் சார்பாக ஜோதிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..