முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு, உள்ளிட்டோரும், துறை சார்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சார் மு.க.ஸ்டாலின், மக்களுக்கான திட்டங்கள், அவற்றின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தேன். பல வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்தாலும் அதனை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், ஒவ்வொரு திட்டமும் பல கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அரசு நிதி மட்டுமின்றி, கடன் வாங்கியும் திட்டங்களுக்காக செலவிடுவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், திட்டங்களை நிறுவேற்றுவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது. பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் தடுக்க வேண்டும் என வழியுறுத்தினார்.