பெண் குழந்தைகளின் பெயரில் 50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரன் வீதம் வைப்பு நிதி செலுத்தப்பட்டு, திட்டத்தின் வைப்பு நிதிக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் விதிகளின்படி, திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, இத்திட்டத்தின் கீழ்வரும் பயனாளிகள், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.
இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், ஆதார் எண்ணுக்காக பெற்றோர் மூலம் விண்ணப்பித்து, அதைக்கொண்டு திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தனது திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள், தங்களது ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், தமிழக அரசின் திட்டங்களிலும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.