கலைஞருக்கு கும்பிடு போடுவது தவறில்லை..!! மாமன் மச்சான் கூட்டணி..!! அண்ணாமலை பதில்..!!
மறைந்த முன்னால் முதலலமைச்சர் கலைஞருக்கு கும்பிடு போடுவது தவறில்லை, ஒருவரது காலில் விழுந்தே கிடப்பது தான் தவறு என அதிமுகவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நச் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும், திமுகவோடு இணைந்து கருணாநிதியின் சிலைக்கு கும்பிடு போடுவதும் வேடிக்கையாக இருக்கிறது., இதை பார்க்கிற மக்கள் என்ன நினைப்பார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்., அண்ணாமலை பற்றி பேசியது சர்ச்சையை கிளப்பியது.. அதற்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது பதிலடி கொடுத்துள்ளார்..
மறைந்த முன்னால் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஐயாவிற்கு கும்பிடு போடுவதில் தவறில்லை. மற்றவரை போல காலில் விழுந்தே கிடப்பது தான் தவறு., ஆர்.பி. உதயகுமார் ஜாதகத்தையே நான் சொல்கிறேன். “சசிகலா முன்பு ஆர்.பி.உதயகுமார் கைகட்டி வாய் பொத்தி கொண்டு மூன்றடி தள்ளியே நிற்பார் அதுவும் பேசும்போது வார்த்தை அதிகமாக வரக்கூடாது என்பதால் அப்படி நிற்பார்.
50 ஆண்டுகளாக அரசியல் வாழ்வில் இருந்த கலைஞருக்கும், பாஜவிற்கும் சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்திற்கு அவர் செய்திருக்கக்கூடிய பணிக்காக சாதாரண விவசாயி மகனான 40 வயது உடைய அண்ணாமலை அவரது நினைவிடத்திற்கு சென்று கும்பிடு போட வைத்தது., அது எனக்கு வெட்கமல்ல., அதை நான் பெருமையாக நினைக்கிறன்..
மறைந்த தலைவர்களுக்கு மரியாதை :
எங்கள் கட்சியின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் கலைஞர் 5 ஆண்டுகள் கூட்டணி அமைத்திருந்தார். இதே கலைஞர் தனது உடன்பிறப்புகளிடம், பாஜவை பற்றி தவறான கருத்துக்களை தமிழகத்தில் பரப்பி வருகிறார்கள். அதை நீங்கள் பரப்ப வேண்டாம் என பதில் அளித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையிலும் 30 ஆண்டு கால சினிமா வாழ்கையிலும் கலைஞர் தமிழ்நாட்டிற்கு பெரும் பங்காற்றியுள்ளார். பல்வேறு விமர்சனங்களை நான் முன் வைத்தாலும் கலைஞருக்கு கொடுத்த மரியாதையை நான் அறிஞர் அண்ணாவிற்கும் கொடுத்துள்ளேன்..
அறிஞர் அண்ணாவிற்கும், பாஜவிற்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்திற்காக பணியாற்றிய தலைவர்களை மறக்கக்கூடாது. அவர்களுக்கு மட்டுமல்ல எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மா அவர்களுக்கும் நான் மரியாதை செலுத்துவேன். தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதை எல்லாம் ஒரு குற்றமாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுவது தான் வேடிக்கையாக இருக்கிறது..
மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவது தவறா..? “நான் யார் காலிலும் விழவில்லை, மண்டிபோட்டு நிற்கவில்லை. கம்பீரமாக நடந்து சென்று 6 அடி இருக்கக்கூடிய நான், நெஞ்சை நிமிர்த்தி கலைஞர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு வந்தேன். அதை நினைத்து நான் பெருமை படுவேன்..
கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா :
கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில், மாநில அரசு நடத்திய விழா, ஒன்றிய அரசு பங்கேற்ற விழா., கலைஞர் நாணயத்துக்கு மாநில அரசு அனுமதி கோரியது. ஒன்றிய, மாநில அரசு விழாவாக அது நடைபெற்றது.. அதற்கான செலவுகளை மாநில அரசே பார்த்துக்கொண்டது. ஒன்றிய அரசு சார்பில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.
அவர் பாஜக சார்பில் கலந்து கொள்ளவில்லை. ஒன்றிய அமைச்சராக பங்கேற்றார். திமுகவை எதிர்க்கின்ற கட்சி பாஜக., திமுக தரப்பில் என்மீது போட்ட வழக்கை வாபஸ் பெறவில்லை. பாஜக ஆளும் மாநிலத்தின் முதலீடுகளை ஈர்த்த முதலீட்டாளர்களை தமிழக முதலமைச்சர் அழைத்தால் நான் கட்டாயம் செல்வேன்., மற்றவர்களை போல அதை வைத்து நான் அரசியல் செய்ய விரும்பமாட்டேன்.
அண்ணாமலை கூறும்போது, ‘‘அதிமுக, திமுக, பாஜ பங்காளிகள்தான். ஆனால் எந்த பங்காளியுடனும் சேரப்போவதில்லை. எங்கள் தலைமையில் கூட்டாட்சி அது மாமன் மச்சான் கூட்டணி. மாமன் மச்சான் கூட்டணி என்பது வேற்றுமையில் ஒற்றுமை’’ என்றார். மாமன் மச்சான் கூட்டணிக்கு விஜய் வந்தாலும் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு, ‘‘அவரும் மாமன் மச்சான்தான்’’ என அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..