பள்ளியில் ஆசிரியர்களுக்கே பாதுகாப்பு இல்லை..!! ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்..! நக்கனேரி பகுதி கவுன்சிலர் கோரிக்கை..!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றிய ஊராட்சி பள்ளிகளை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் பேசிய 13வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பகவத் சிங் இந்த கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார். அப்பொழுது அதை நக்கனேரி பகுதி 11வது வார்டு கவுன்சிலர் அனுசுயா மறுத்துள்ளார்.
பள்ளிகளில் ஆசிரியர் உயிர்களுக்கே பாதுகாப்பு இல்லை.., நக்கனேரி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. எனவே தான் இதுபோன்ற தொடர் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மூன்று ஆண்டுக்கு மேல் ஒரே பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என பேசியுள்ளார். ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்காக நான் கோரிக்கை வைக்கிறேன்.., என கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..