தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடிவு செய்த கர்நாடக..!! கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சொன்னது என்ன..?
தமிழக அரசு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வரை காவேரியில் இருந்து கர்நாடகாவிற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை திறந்து விட வில்லை.., இதுகுறித்து நேற்று உச்சநீதி மன்றத்திற்கு மனு கொடுத்துள்ளோம்.
இந்நிலையில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் 10 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட முடிவு செய்து உள்ளோம் என கூறியுள்ளனர். கர்நாடக அணையில் இருக்கும் தண்ணீரின் அளவை பொறுத்தே.., உச்சநீதி மன்றம் தண்ணீரை திறந்து விட உத்தரவு பிறப்பிக்கும்.., உத்தரவு வருவதற்கு முன்னரே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார். கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
செய்தியாளர்கள் முன் பேசிய அவர்.., தண்ணீர் திறந்து விடும் பணி இதற்கு முன்னரே தொடங்கி விட்டதாகவும். அதன் தொடர்ச்சியாக நேற்று மாலையே தண்ணீர் திறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில்.., 14,000 கன அடி நீர் திறந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இனி தண்ணீர் எப்பொழுதும் தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..