செந்தில் பாலாஜி வழக்கில் இனி டைம் கிடையாது..!! ED-யை கண்டித்த நீதிபதி..!!
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணையில் சொலிசிட்டர் ஜெனரல் வரத் தாமதமாவதால் வழக்கை மாத இறுதிக்கு தள்ளிவைக்க கோரி அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்டுள்ளது. அதற்கு நீதிமன்றம் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்…
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தது.
எனவே செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நடந்த இந்த வழக்கின் பட்டியலை வெளியிட்டது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு ஒரு வழக்கில் ஆஜராகியிருந்ததால், செந்தில் பாலாஜி வழக்கில் அவர் ஆஜராகவில்லை.
எனவே நீதிபதி ஓகா, அந்த வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமலே ஒத்திவைத்தார். ஆனால், அந்த வழக்கில் சில விளக்கங்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது. போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த 3 வழக்குகளையும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரிக்கப்போகிறதா..? அல்லது 1000-க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்ட வழக்கை தவிர்த்துவிட்டு செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை மட்டும் விசாரிக்கப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது..
அமலாக்கதுறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதற்கான வாதங்களை முன் வைத்தார்.. நீண்ட நேர ஒத்திவைப்பிற்கு பின் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகி, நீதிபதி எழுப்பிய கேள்விக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகஸ்ட் 20-ஆம் தேதி விளக்கம் அளிப்பார் என இதற்கு முன் தெரிவித்த நிலையில் அந்த வழக்கை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் ஆஜராக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வரத் தாமதமாகும் எனக்கூறி வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளிவைக்கக் கோரி அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைக் கண்டித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது. இன்று இறுதி நாள் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..