“மம்தா பேனர்ஜி சுட்டு கொலை செய்யப்பட வேண்டும்.. ” அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்..!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் “ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்” கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து தலை., கை கால்களில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த “சஞ்சய் ராய்” என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கை, முன்பு காவல்துறையினர் நடத்தி வந்த நிலயில் சி.பி.ஐ விசாரணை மாற்றபட்டது. இந்த வழக்கின் விசாரணையில், அந்த பெண் மருத்துவர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள மருத்துவருக்கு, நீதி கிடைக்க வேண்டும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போரட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள மவுலாலியில் இருந்து டோரினா கிராசிங் வரை கண்டன பேரணி நடைபெற்றது.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சர்மா என்ற பி.காம் 2 ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் சமூக வலைதளத்தில் மம்தா பானர்ஜியை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ”இந்திரா காந்தி போன்று மம்தா பானர்ஜியை சுட்டுக்கொலை செய்யவேண்டும் என்று, குறிப்பிட்டு இருந்தார். அது இணையத்தில் காட்டு தீயாய் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த பதிவை பார்த்த கொல்கத்தா போலீசார் மேற்கு வங்க முதல்மைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளதால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அப்பெண்ணை கைது செய்தனர்.
மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மருத்துவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”