“அன்பிற்கு எல்லையோ முருகா..” தவெக தலைவர் விஜய் வாழ்த்து…!!
பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த தீப்பொறியில் உருவான கந்தனிடம் தாயார் சக்தி தேவி அசுரனை அழிப்பதற்காக வேல் கொடுத்தது, தைப்பூச நாள் என்பதால் இந்த நாள் தமிழர்களால் மிகவும் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் ஆலயங்களிலும், முருகப்பெருமான் ஆலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் இன்று சாமி தரிசனம் செய்வர்.
தமிழகம் மட்டுமல்லாது சிங்கப்பூர் மலேசியா என உலகெங்கிலும் உள்ள முருகனின் திருக்கோவில்களில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் இந்த நாளில் முருகன் கையில் உள்ள வேலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். தைப்பூசத் திருநாள் பழனியில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என்றாலும், முருகனின் அறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது..
மேலும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தை பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தனித்துயர்ந்த குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும், தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்.. என இவ்வாறே பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..