மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போராட்டம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலதாமதமாக சம்பளம் வழங்குவதை கண்டித்து, துணைவேந்தரை சிறைபிடித்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலதாமதம் செய்யாமல் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கக்கோரி, பல்கலைக்கழக அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் துணைவேந்தர் அலுவலகம் முன்பு ஒரு வாரத்திற்கு மேலாக, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை வழங்காத கடந்த மாத சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி துணைவேந்தர் குமாரை சிறைபிடித்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
