அப்புறம் என்னப்பா வேட்ப்பு மனு தாக்கல் செஞ்சாச்சு.. தேதியை சொல்லிடலாமா..
சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதி மற்றும் மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடடிவடையும் நிலையில், மொத்தம் 679 தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதியும், சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 14ம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதி மற்றும் மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
அதன்படி, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், அக்டோபர் 20 ஆம் தேதி தான் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிசோரத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் முதற்கட்டமாக நவம்பர் 7ம் தேதி 20 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது….
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..