திருமண ஆசையை காட்டி ஏமாற்றிய வாலிபர்…!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
ராணிப்பேட்டையில் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த குற்றவியல் நீதிபதி
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை காரை சுப்பிரமணிய கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி வயது (46) என்பவர் கடந்த 2010-ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய குற்றத்திற்காக ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 14 ஆண்டுகளாக இவ்வழக்கு வாலாஜாபேட்டை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று குற்றவியல் நீதிபதி பிரகந்தா இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கினார்..
மேலும் வழங்கப்பட்ட தீர்ப்பில் கிருஷ்ணமூர்த்தி மீது 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதேபோல் ரூபாய் 6000 அபராதம் விதிக்கப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..