பட்டாசு தயாரிக்கும் குடோனில் வெடி விபத்து..!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் சொந்தமாக வானவெடி தயாரிக்கும் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார்.
அதில் நாட்டு வெடிகள், திருமணத்திற்குத் தேவையான வானவெடிகள் ஆகியன தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணி திவீரமாக நடைப்பெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று வழக்கமாக பணிக்கு வந்த உழியர்கள் 4 பேர் பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட கர்ணன் என்பவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேர் உடலில் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் திவீர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்தில் விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து வெடி விபத்திற்கு காரணம் குறித்து உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்