“கள்ள மது விற்பனை..” பிடிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய பெண்கள்..!!
திருப்பத்தூர் அருகே மது விற்ற நபரை பிடிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்திய 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் அருகே மாடப்பள்ளி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பின்புறம் ஒருவர் வெளிமாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்து கொண்டு இருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் ஒருவர் என 2 பேர் வெளிமாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்பவரை பிடிக்க மாடப்பள்ளி பகுதிக்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மது பாக்கெட் விற்ற திருப்பத்தூர் போஸ்கோ நகரை சேர்ந்த ராம் என்பவரை பிடித்தனர்.
அப்போது ராமுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராம் போலீசாரை தாக்கினார். இதனையெடுத்து அந்த பகுதியில் இருந்த சிலரும் ராமுக்கு ஆதரவாக போலீசாரை தாக்கி கீழே தள்ளினர். இதனைதொடர்ந்து போலீசார் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் பேரில் வந்த போலீசார் தாக்கியவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது 5 பெண்களை போலீசார் பிடித்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் போலீசார் 5 பெண்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் அவர்கள் மாடப்பள்ளி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சென்னம்மாள் (வயது 32), வெங்கடேசன் மனைவி நந்துபிரியா (22), டில்லி மனைவி ராணி (60), கணேசன் மனைவி உஷா (44), சின்னத்தம்பி மனைவி தும்த்தா (56) என்பது தெரியவந்தது. மேலும் ராம் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..