பொன்னேரியில் தொடரும் காத்திருப்பு போராட்டம்..!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலக சங்கம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பில் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலகம் சங்கம் செய்துள்ள முடிவின்படி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், பெண் அலுவலர்களை ஒருமையில் தரக்குறைவாக வசைப்பாடி அவமதித்த,
அரசு நிர்வாகத்தில் அது மீறி அடாவடித்தனமாக தலையிட்டு வரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்களின் தரம் தாழ்ந்த நடவடிக்கையை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. பொன்னேரி வட்டக்கிளை செயலாளர் கீதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்
Discussion about this post