வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆக்கிரமிப்பு கட்டிடங்களை நெடுஞ்சாலைத் துறை சார்பில் அகற்றப்பட்டு வரும் நிலையில் – நான்கடுக்கு கட்டிடத்தை பொக்லைன் இயந்தின் மூலம் இடிக்கும் போது பொக்லைன் இயந்திரம் மீது கட்டிடம் விழுந்ததில் நூல்லிழலில் ஓட்டுனர் உயிர்தப்பினார்.
வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்து காகிதபட்டறை டான்சி தொழிற்சாலை வரை மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 32 வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வருடமாக முயற்சி செய்து வருகின்றனர்.இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அவர்களே அகற்ற, வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.கால அவகாசம் கொடுத்த பிறகும் கூட அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த நான்கடிக்கு கட்டிடத்தை இடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வந்தனர் இந்த நிலையில் பொக்லைன் வாகனத்தை வரவழைத்து கட்டிடத்தின் முன் பகுதியில் உள்ள தூணை இடிக்கும் போது கட்டிடம் சரிந்து பொக்லைன் வாகனத்தின் மீது விழுந்தது இந்த கட்டிடம் வழிந்த விபத்தில் பொக்லைன் ஓட்டுநர் நூல்களில் உயிர் தப்பினார்