மனைவிகளுக்கு மரியாதை செய்யும் கணவர்கள்..!! இது என்ன புதுசா இருக்கு..?
பொள்ளாச்சி அருகே பூ மற்றும் பழங்கள் மாற்றி மனைவி களுக்கு மரியாதை செய்த கணவர்கள் மனைவி நலவேட்பு விழா
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் மனைவிமார்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மனைவி நலவேட்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மனைவி மார்களின் அன்பை போற்றும் வகையிலும், மனைவி மார்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, கலந்து கொண்ட தம்பதியினர், கனவன் மார்கள், மனைவி மார்களுக்கு மலர் கொடுத்தும், மனைவிமார்கள் கணவன் மார்கள் கைகளில் கனி கொடுத்து பரிமாறிக் கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒய்வு பெற்ற தலைமை செயலர் இறையன்பு மனைவியின் மான்பு குறித்து பேசினார். இந்நிகழ்வில் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமை உரையாற்றினார்
ஆழியார் அறிவித்திருக்கோவில் இணை நிர்வாக அறங்காவலர் சின்னச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post