கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. காரணம்.. எருமை கூட்டமா..!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து அனந்தபுரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று பிரகாசம் மாவட்டம் மார்க்கபுரம் மண்டலம் திப்பையபாளையம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக எருமை கூட்டம் ஒன்று வந்தது.
திடீரென எருமைகள் சாலையின் குறுக்கே ஓடியாதால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை அவற்றின் மீது மோதாமல் தடுக்க முயன்ற நேரத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்து விழுந்து விபத்துகுள்ளானது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் சிக்கி இரண்டு பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைதொடர்ந்து, மேலும் சிலர்க்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இந்த கோர விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்