உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டைபிரேக்கர் சுற்று தொடங்கியது.
உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று இறுதி கட்டத்தை எட்டிய இந்த தொடரில் இந்திய இளம் க்ராண்ட் மாஸ்டர் ப்ரக்ஞானந்தாவும், நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சனும் மோதி வருகின்றனர்.
நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ப்ரக்ஞானந்தா சிறப்பாக விளையாடினார். நேற்று நடந்த 2-வது சுற்று போட்டி டிராவில் முடிவடைந்ததை அடுத்து இன்று டைபிரேக்கர் சுற்று நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடனும், இரண்டாம் சுற்றில் கருப்பு நிறக் காய்களுடனும் பிரக்ஞானந்தா விளையாடினார். டைபிரேக்கர் சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் பிரக்ஞானந்தா மீண்டும் களமிறங்கியுள்ளார்.