பழனியில் டிஎஸ்பியை தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்ட பாஜகவினர்…
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு தமிழக ஆளுநர் ரவி வருகை தந்து சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில் தொடர்ந்து பழனிக்கு வருகை தரவுள்ள ஆர். என் ரவியை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பாக கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே திடீரென்று பாரதிய ஜனதா கட்சியினுடைய மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் எதிர் கோஷமிடவே பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பழனி டிஎஸ்பி சரவணன் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்ற பொழுது டிஎஸ்பிஐ நெஞ்சில் தள்ளி தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாஜகவினர் அட்டூழியம் அதிகரித்த நிலையில் டிஎஸ்பி சரவணனை தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..