சரிந்தது தங்கம் விலை..!! உற்சாகத்தில் நகை பிரியர்கள்..!!
இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. மேலும் தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 7,050 ரூபாய்க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 56,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து 7,691 ரூபாய்க்கும்., சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து 61,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி விலை 101 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..