பரதேசி பட படப்பிடிப்பு… காஜல் பசுபதி பார்த்த கசப்பான சம்பவம்…!
கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரதேசி. அதர்வா, வேதிகா, தன்ஷிகா, ரித்விகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இவர்கள் மட்டுமின்றி நடன இயக்குநர் சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதியும் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்த காஜல் பசுபதிக்கு கசப்பான சில சம்பவங்கள் நடந்துள்ளது. இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் வெளிபடையாக பேசி இயக்குநர் பாலாவை விமர்ச்சித்துள்ளார்.
அதாவது ”பரதேசி படப்பிடிப்பின் போது சண்டை காட்சி குறித்து நடிகைக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சிக்காக இயக்குநர் பாலா வேதிகாவிற்கு பதிலாக துணை நடிகையை அடித்தார்.
அது எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. பாலா தான் மிகவும் தைரியமான ஆளாச்சே வேதிகாவையே அவர் அடித்து இருக்கலாம். அந்த துணை நடிகையின் இடத்தில் நான் இருந்து இருந்தால் நிச்சயம் கேள்வி எழுப்பி இருப்பேன்” என்று கூறியுள்ளார்.