பிரபல தயாரிப்பாளர் திடீர் மறைவு.. அதிர்ச்சியில் திரையுலகம்..!
ராட்சசன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு உடல்நல குறைவால் காலமானார்.
கோலிவுட்டின் முன்னனி தயாரிப்பாளராக வலம் வந்தவர் டில்லி பாபு. இவரது ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் முன்னனி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான இவர் அதன்பிறகு மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர், மிரள் மற்றும் கள்வன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக டில்லி பாவு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் திவீர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று (செப்.9) அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியி ஏற்படுத்தி உள்ளது. மேலும் திரையுலகினரும் இவரது ரசிகர்களும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.