அத்துமீறும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்..! 4பேரால் மாணவனுக்கு ஏற்பட்ட விபரீதம்..!!
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே உள்ள பூங்கா இரயில் நிலையம் வெளியே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாணவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.
இன்று காலை சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே உள்ள பூங்கா ரயில் நிலையம் வெளியே.., பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார்.., மாணவனை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். பின் பேருந்து நிலையம் வெளியே இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது இந்த கொடூரம் பற்றி தெரியவந்தது.
அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவர் ராகேஷ் ஆனந்த் என்ற மாணவர் பேருந்து ஏற செல்லும் பொழுது பேருந்தில் இருந்து இறங்கிய நான்கு மாணவர்கள்.., ராகேஷ் ஆனந்தை மிரட்டியுள்ளனர்.., அப்போது ராகேஷ் ஆனந்த் எதிர்வாதம் செய்துள்ளார்.
பின் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.., பின் அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் முதுகிற்கு பின்னே வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவர் ராகேஷ் ஆனந்த் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அந்த 4பேர் கொண்ட கும்பலில் ஒருவன் பச்சையப்பன் கல்லூரி அடையாள அட்டை அணிந்து இருந்ததால்.., மாணவர்களின் அடையாளம் வைத்து காவல் துறையினர் அந்த 4பேரை தேடி வருகின்றனர்.
மேலும் ராகேஷ் ஆனந்த் தீவிர சிகிச்சையில் இருப்பதால்., அவர் கண்விழித்த பிறகு இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து தெரிய வரும்.., என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..