சாலை மறியலில் இறங்கிய கல்லூரி மாணவர்கள்
கரூரில் அரசு வேளாண் கல்லூரியில் அடிப்படை வசதி இல்லாததால் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கரூரில் அரசு வேளாண் கல்லூரியில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறை வசதி, பேருந்து வசதி, மற்றும் விடுதிவசதி, போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் கரூர் – திருச்சி சாலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கல்லூரி மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.