இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வந்தார் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
விடுதலை படத்திற்கான வேலைகள் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கியது. 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை 150 நாட்களுக்கு மேலாக எடுத்துள்ளனர். இது குறித்து படக்குழு கூறுகையில், நாங்கள் நினைத்ததை விட படத்தின் நீளமும், பட்ஜெட்டும் தாண்டிவிட்டது கதை கு தேவை இருந்ததால் இப்படத்தை 2 பாகமாக எடுத்துள்ளோம் என்று கூறுகின்றனர்.
இப்படத்தின் முதல் பாகம் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெற்றிமாறன் தற்போது சூர்யா உடன் இணைந்து ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் வடிவாசலின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.