அந்தகன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. மேடையிலேயே சிம்ரன் செய்த செயல்..!
தமிழ் சினிமாவின் ஆல் டைம் கிளாசிக் ரீல் ஜோடி என்றால், பிரசாந்தையும், சிம்ரனையும் நாம் கூற முடியும். அந்த அளவிற்கு, பல்வேறு படங்களில், இவர்கள் இரண்டு பேரும் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான அந்தாதூன் என்ற படத்தை, தமிழில், அந்தகன் என்ற பெயரில், ரீமேக் செய்துள்ளனர்.
இந்த படத்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு, பிரசாந்தும், சிம்ரனும் இணைந்து நடித்துள்ளனர். நேற்று ரிலீஸான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரீமியர் ஷோ நடைபெற்றது. இந்த ஷோவில், படம் பார்த்த பிறகு, நடிகை சிம்ரன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “இந்த வாய்ப்பை தியாகராஜன் சார் கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து அவர் கொடுத்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியை தருகிறது” என்று கூறினார். மேலும், “தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு பெரிய முக்கியத்துவம் கதையில் எழுதப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஆனால், இதுபோல சில படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் போது தான் அவர்களால் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும். இயக்குநர்கள் பெண் கதாபாத்திரங்களையும் வலிமையாக எழுத வேண்டும்” என்று கூறினார்.
-பவானி கார்த்திக்