யானை தாக்கி வனக்காவலர் பலி!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் விளாமுண்டி வனசரகமும் உள்ளது. இந்த விளாமுண்டி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வந்தவர் தங்கராஜ்.
49 வயதாகும் இவர், நேற்று சிங்கமலை வனப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, அங்கிருந்த ஒற்றை காட்டு யானை, அவரை துரத்தி சென்றுள்ளது. இறுதியில் யானையிடம் சிக்கிய தங்கராஜ், அதன் காலில் அடிப்பட்டு, படுகாயம் அடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே, அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்