மேம்பால பணிக்காக வீடுகள் இடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளையும் அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட அன்னை சத்யா நகர் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் தற்காலிக சாலை அமைப்பதற்காக அங்கு உள்ள வீடுகளை முன்னறிவிப்பின்றி திடிரென சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை இடிக்க முற்பட்ட போது மாற்று இடம் வழங்காததால் வீடுகளை இடிக்க மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு இடிக்கும் பணி ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆர் கே நகர் மக்கள் அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினரை அப்பகுதி மக்கள் சூழ்ந்து முற்றுவிட்டனர் . அதைக் கூட பொருட்படுத்தாமல் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை வைத்து வீடுகளை இடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக ஒரு திமுகவிற்கு சொந்தமான வீட்டை இடிக்காமல் மற்ற இரண்டு வீடுகளை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது எனவும் ஒரு தலைபட்சமாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாகவும் மாற்று இடம் வழங்காமலே வீடுகளை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,