தென்னாப்பிரிக்காவில் தீ விபத்து..!! நள்ளிரவு பிடித்த தீயால்..?
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின் 5 வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 73 பேர் உயிர் இழந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா மத்திய ஜோகன்னஸ்பர்கில் உள்ள 5 மாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு ஒன்றரை மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் மாடியில் பற்றிய தீ காற்றின் வேகம் காரணமாக கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. 5 மாடி கட்டடமே தீ பிடித்து எரிந்ததால் ஜோகன்னஸ்பர்க் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் யாரும் தப்பிக்க முடியவில்லை அதனால் 73 பேர் சம்பவ இடித்திலேயே உயிர் இழந்துள்ளனர். இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குள் தீ கட்டடம் முழுவதும் பரவியதால் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே தீயை அணைத்தனர்.
பின் அதிகாலை 43 பேரை காப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என ஜோகன்னஸ்பர்க் பேரிடர் மேலாண்மைபடை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தென் ஆப்ரிக்காவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post