ஆளுநரை மாற்றும் பிரதமர்..! மறுப்பு தெரிவித்த ஸ்டாலின்..!! காரணம்..?
திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருப்பதே திராவிடம் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்ல திருமணவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு மாற்றிவிட வேண்டாம் என கோரிக்கை வைத்தார்.
திராவிடம் என்றால் என்ன..? என்று கேட்கிறாரே அவரே தொடர்ந்து ஆளுநராக தொடரட்டும் என தெரிவித்த முதலமைச்சர், திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருப்பதே திராவிடம் தான் என கூறினார்.
மத்தியில் நடைபெற்று வரும் பாஜக. தலைமையிலான ஒன்றிய பாஜக அரசுக்கு முடிவுகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டதாக கூறிய அவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் நேரத்தில் சொல்லப்பட்ட உறுதி மொழிகளை சிறப்பாக நிறைவேற்றிக் உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி உறுதியாய் வெற்றி பெறும் என கூறினார்.