பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறிய ஆளுநர் மாளிகை..!! கண்டனம் தெரிவித்த மதிமுக வைகோ..!!
ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறி இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மீது, அக்டோபர் 25 ஆம் முதன்மை நுழைவாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, பெட்ரோல் குண்டு வீசிய நந்தனம் எஸ்.எம்., நகரைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பவரை உடனடியாக கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீச துணிந்தது கடும் கண்டனத்துக்குரிய செயல் என தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தி.மு.க., தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வாய்மொழி வாயிலாக, பொதுக்கூட்டம் மற்றும் சமூக வலைதளம் வாயிலாக, ஆளுநர்ர் பற்றி அவதூறாக மிரட்டல் விடும் வகையில் பேசி வருவதாகவும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, ஆளுநர் பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள கருத்து விஷமத்தனமான அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் போல ஆளுநர் ஆர். என். ரவி செயல்படுவதும், இந்துத்துவக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பதும், ராஜ்பவனில் போட்டி அரசு நடத்துவதைப் போல இயங்குவதும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டிய ஆளுநர், மரபுகளை மீறுவதால் அரசியல் கட்சிகள் கண்டனம் செய்வதாக குறிப்பிட்டுள்ள வைகோ, ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்குக் கருத்துரிமை இருக்கிறது என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திசை திருப்பும் வகையில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் மீது ஆளுநர் பழி போட்டு இருப்பது, ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதா க வைகோ குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சக்திகள் சூத்திரதாரியாக இருந்து ஆளுநரைப் பயன்படுத்துகின்றனர் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள வைகோ, இத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்படும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..