எடப்பாடியை கதறவிட்ட போஸ்டர்..! வெச்சி செய்த ஊர் மக்கள்..!!
ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அதிமுக வினர் மதுரையில் மாநாடு நடத்த இருக்கும் நிலையில், மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக அதிமுகாவின் பொது செயலாளர்.., எடப்பாடி பழனி சாமி பொறுப்பு ஏற்றுள்ளார். பல்வேறு பிரச்சனைகளை தாண்டி அதிமுகாவின் பொது செயலாளர்கள் எடப்பாடி பொறுப்பேற்ற பிறகு மிக பெரிய மாநாட்டை அதிமுகாவினர் நடத்த இருந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.
அதிலும் வேடிக்கையாக இருக்கும் வகையில் எடப்பாடிக்கு எதிராக தென்மாவட்ட மக்கள் பல்வேறு போஸ்டர்களை திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் ஊட்டி போன்ற பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர் அடித்து சுவர்களில் ஒட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
அதிலும் மதுரை முழுவதும் எடப்பாடி மதுரைக்கு வரக்கூடாது எனும் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை தீர்ப்பு வரும் நிலையில், மதுரை முழுவதும் 100 வார்டுகளில் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்கள் இருப்பது எடப்பாடி பழனி சாமிக்கும், அதிமுக உறுப்பினர்களுக்கும் இடையே பெரும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post