ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் பிருபா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை பெண்ணை இழுத்துக்கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான வீடியோவில், முதலையின் தாடைகளுக்கு இடையில் சிக்கி இருந்த பெண்ணை முதலை இழுத்துச் செல்வதை காண முடிகிறது.இதன் பிறகு அவளைத் துண்டு துண்டாகக் கிழித்து முழுவதுமாக விழுங்குவதையும் காண முடிகிறது. ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டம் பலட்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஜோத்ஸ்னா ராணி .இவருக்கு வயது 35. இவர் அப்பகுதியில் உள்ள பிருபா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் இருந்த முதலை குளித்துக் கொண்டிருந்த ஜோத்ஸ்னா ராணியை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டது.
Disturbing visual : A crocodile ate up a woman while she was taking her bath near a river in Odisha's #Jajpur district.#odisha #crocodile #caughtoncamera #horrible #Floods #HeavyRainfall #rain #Palatpurpic.twitter.com/VsvEvCYbOn
— Priyathosh Agnihamsa (@priyathosh6447) August 16, 2023
ஜோத்ஸ்னா ராணியை கொன்ற முதலை அவரது உடலை ஆற்றுக்குள் இழுத்து சென்றது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, அது பெண்ணின் உடலை வெளியே எடுத்தது வந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து முதலை நடமாட்டம் இருப்பதால் ஆற்றில் குளிக்க செல்பவர்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.