படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளது. மொத்தம் 5 நடிகர்களின் போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில், நடிகர் வீரா ‘ராதா’ என்கிற கதாபாத்திரத்திலும், ஜான் கோகென் ‘க்ரிஷ்’ என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
அவர்களை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம், 96, போன்ற படங்களில் நடித்துள்ள பக்ஸ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். நடிகர் பிரேம்… பிரேம் என்கிற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். அதேபோல், நடிகர் மோஹன சுந்தரம் மைபா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.