“”குழந்தைகளை தவிக்க விட்டு கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை-கரூர்””
கரூர் அருகே குழந்தைகளை தவிக்க விட்டு கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த கல்லுமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் ஐயப்பன் ஊரை காலி செய்து விட்டு குடும்பத்துடன் கரூர் அடுத்த பஞ்சமாதேவி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இதனைதொடர்ந்து, வழக்கம்போல், குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு புறப்பட்டு சென்று மாலை பள்ளி முடிந்து வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை.
பின்னர் அருகில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஐயப்பன், ஜெயா இருவரும் தூக்கில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
