தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை..! அடுத்த 3 மணி நேரத்திற்கு..?
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..,
மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல காற்றின் காரணமாக கடலோர பகுதியில் அதிக காற்று வீசுவதால் பொது மக்கள் மற்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு மட்டும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post