பாஜகவை விரட்டி அடித்த போலீஸ்..!! மறியலில் இறங்கிய அண்ணாமலை..!!
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் வேட்பு மனுவை அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் ஏபி முருகானந்தம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளார். அப்பொழுது வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் அறிவித்த நிலையில் பாஜக ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பாஜகவினரை தடுத்து நிறுத்தி பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்களுக்கும் பாஜக கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் பாஜகவின் வேட்பாளர் ஏ பி முருகானந்தம் உள்ளாடை பனியனுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அவர்களிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கேட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சில கட்சி நிர்வாகிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அண்ணாமலையுடன் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவலர்கள் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே கலைந்து சென்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..