நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்…!! வந்த வெடிகுண்டு மிரட்டல்..!!
மும்பையில் இருந்து நியூயார்க் நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
மும்பை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா ஏஐ 119 விமானமானது நியார்க்கிற்கு செல்ல புறப்பட்டுள்ளது.. அப்போது நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது..
இந்த செய்தியை அறிந்த ஏர் இந்தியா.., உடனடியாக pilot-யை தொடர்பு கொண்டு டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கியது.. வெடிகுண்டு மிரட்டல் இருக்கும் தகவலை அறிந்த பயணிகள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்..
அதன் பின்னர் அவசர அவசரமாக விமானத்தை விட்டு வெளியேறினார்கள்.. அதன் பின்னர் அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அதில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்..
இதற்கிடையில் வெடிகுண்டு நிபுணர்கள்., காவல்துறை அதிகாரிகள் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..